அயர்லாந்தில் அமுல்படுத்தப்பட்டிருந்த அனைத்து கொவிட் கட்டுப்பாடுகளும் இன்று தொடக்கம் நீங்கவுள்ளதாக அந்நாட்டு பிரதமர் மிஷேல் மார்டின் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த வாரம் ஐரோப்பாவின் கொவிட் தாற்று அதிகரித்த நாடுகளில் அயர்லாந்து உயர் இடத்தைப் பிடித்திருந்தது.
ஆயினும் அந்நாட்டு மக்கள் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொண்டமைக் காரணமாக ஆபத்தான நிலைமையொன்று ஏற்படவில்லை என குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை பூஸ்டர் தடுப்பூசி அந்நாட்டின் நிலைமையை முற்றிலும் மாற்றியுள்ளதாகவும் இன்று தொடக்கம் அயர்லாந்துக்கு மகிழ்ச்சியான நாள் எனவும் அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.