Home LOCAL நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று கூடி புதிய யுகத்தை உருவாக்கலாம்: ரணில்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று கூடி புதிய யுகத்தை உருவாக்கலாம்: ரணில்

0
நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று கூடி புதிய யுகத்தை உருவாக்கலாம்: ரணில்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று கூடி சிந்திப்பதன் மூலம் ஒரு புதிய யுகத்தை உருவாக்க முடியும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

GST மற்றும் VAT ஆகிய இரண்டு வரிகளும் அறிவிடும் நாடு எங்கிலும் இல்லை எனவும் இரண்டு வரிகளிலும் ஒன்று தான் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் தற்போது இரண்டு வரிகளும் ஒரே பொருட்களில் அறவிடப்படுவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் வரி செலுத்த வேண்டியது தொடர்பிலான அதிகாரம் வருமான வரி திணைக்களத்திற்கே உள்ளதாகவும் இருப்பினும் இம் முறை நிதி அமைச்சு எதற்காக இதில் தலையிடுகிறது எனவும்; கேள்வி எழுப்பினார்.

அத்துடன் நாட்டில் ஏகப்பட்ட கடன் பிரச்சினைகள் உள்ளதாகவும், ஐஆகு ற்கு செல்வதா என்ற தீர்மானம் குறித்து வெகுசன ஊடக அமைச்சர் கருத்து தெரிவித்ததாகவும், அத் தீர்மானமானது பெப்ரவரியில் நிதி அமைச்சிடம் இருந்து எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் தற்போது சபையில் இருப்பவர்கள் ஆட்சியை பாதுகாப்பதற்கு அல்லது ஆட்சியை கவிழ்ப்பதற்காக கதைக்கவில்லை எனவும் மாறாக மக்களையும், நாட்டின் எதிர்காலத்தையும் பாதுகாக்கவே கேள்வி எழுப்புவதாகவும் தெரிவித்தார்.

மேலும் நடாளுமன்றம் என்ற ரீதியில் நாட்டைக் கட்டியெழுப்ப புதிய வழிகளையும் புதிய மார்கத்தையும் உருவாக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன் நடாளுமன்றின் உறுப்பினர்கள் ஒன்று கூடி ஜப்பான், பிரித்தானியா, இந்தியா,கனடா போன்ற நாடுகளால் அந்நாட்டில் மாற்றங்களைக் கொண்டு வர முடியுமாக இருந்தால் நம் நாட்டில் ஏன் ஒரு புது யுகத்தை உருவாக்க முடியாது எனவும் கேள்வி எழுப்பினார்.

மேலும் யதார்த்தத்தை உணர்ந்து செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here