1970 ஆம் அண்டுகளில் விவசாயற்திற்காக காணப்பட்ட செயற்திட்டங்கனிள் பிழைகளை ஒதுக்கி வைத்து விட்டு அதில் காணப்படும் நன்மையான பகுதிகளை நடைமுறைப்படுத்துவதே நாட்டை அபிவிருத்தி நோக்கில் கொண்டு செல்வதற்கான சிறந்த வழிமுறை என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அன்று ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சாலைகள் இன்று இருந்திருந்தால் டொலர் தேவைக்காக மற்ற உலக நாடுகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்க தேவையில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
1978 ஆம் ஆண்டுகளில் விவசாயத்திற்கு காணப்பட்ட செயற்திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி அது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளார் எனவும் தெரிவித்தார்.