கொவிட் தொற்றுக்குள்ளான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது வரையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பரீட்சார்த்திகள், பரீட்சை நாளில் கொவிட் தொற்றுக்குள்ளாகியிருப்பவர்கள் அல்லது அதற்கு முன்னர் தொற்றுக்குள்ளாகும் மாணவர்களுக்கு வைத்திய பரிசோதனை அறிக்கையின்படி குறித்த பரீட்சாத்திகளுக்காக வலய கல்வி மட்டத்தில் பரீட்சை நிலையங்களை அமைத்துள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் இவ்வாறான 108 நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் குறித்த பரீட்சை நிலையங்களுக்கு பெற்றோர்களே மாணவர்களை அழைத்து செல்ல வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஐந்தாம் தரத்திற்கான புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெறவுள்ளது.