இம்முறை தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் பரீட்சை வினாத்தாளொன்றிற்கு விடை எழுதுவதற்காக மேலதிகமாக 15 நிமிடங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக வெகுசன ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
எதிர்வரும் 22 ஆம் திகதி தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நடாத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.