திருகோணமலை குச்சவெளி ஒலிபரப்பு நிலையம் அமைந்துள்ள காணியில் சூரிய மின்னுற்பத்தி

இலங்கை அரசாங்கத்திற்கும் ஜேர்மன் அரசாங்கத்தின் ஒலிபரப்புச் சேவையான டொயிஸ்வெல் நிறுவனத்திற்கும் இடையில் 1980 ஆம் ஆண்டில் கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தத்திற்கமைய திருகோணமலை குச்சவெளிப் பிரதேசத்தில் ‘ஜேர்மன் குரல்’ வானொலி சிற்றலை மற்றும் மத்திய அலைவரிசை ஒலிபரப்பு நிலையம் நிறுவப்பட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டு குறித்த ஒலிபரப்பு நிலையத்தின் செயற்பாடுகள் மற்றும் உரிமை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், குறித்த காணியின் 90% வீதமான பகுதி ஒலிபரப்பு நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒலிபரப்புச் சேவைகளுக்கு எதுவித பாதிப்புக்களும் ஏற்படாத வகையில் சூரிய மின்னுற்பத்திக்கு குறித்த காணியைப் பயன்படுத்துவதற்கான இயலுமை காணப்படுகின்றது.
அதற்கமைய, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு வருமானம் கிடைக்கக் கூடிய வழிமுறையாக குறித்த காணியில் சூரிய மின்னுற்பத்திக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இயலுமை கிட்டும் வகையில் குறித்த காணியை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு ஒப்படைப்பதற்காக வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here