Home LOCAL களனிதிஸ்ஸ மின் நிலையம் மூடப்படும் அபாயம்

களனிதிஸ்ஸ மின் நிலையம் மூடப்படும் அபாயம்

0
களனிதிஸ்ஸ மின் நிலையம் மூடப்படும் அபாயம்

இன்று மாலை  முதல் களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தின் அனைத்து செயற்பாடுகளும் இடைநிறுத்தப்படும் என மின் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருள் இன்றுடன் முடிவடைவதன் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேவையான எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக பல சந்தர்ப்பங்களிலும் எரிசக்தி அமைச்சு மற்றும் பெற்றோலிய கூட்டுதாபனத்துடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் தற்போது வரையில் சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை என குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக இன்று மாலை 5.00 மணி முதல் தேசிய மின் கட்டமைப்புக்கு 300 மெகா வொட் அளவிலான மின்சாரம் குறைவடைவதுடன் இன்று இரவு வேளையில் ஒன்றரை மணித்தியாலங்களுக்கு மின் துண்டிப்பு இடம்பெறும் என மின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here