எதிர்வரும் செவ்வாய்கிழமை வரையில் மின்வெட்டு இடம்பெறாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மின்வாரியங்களின் டீசல் திறன், எரிபொருள் எண்ணெய் மற்றும் நீர் திறன் ஆகியவற்றை கண்கானித்து இது தொடர்பில் எதிர்வரும் நாட்களில் தீர்மானங்கள் எடுக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் உயர் மேலதிகாரி தெரிவித்தார்.
அத்துடன் பெற்றோலிய கூட்டுதாபனத்தினால் இன்றைய தினம் 3000 மெட்ரிக் தொன் அளவிலான டீசல் இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் முடிந்தவரையில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சாரசபை பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.