இலங்கையின் மூன்றாவது அதிவேக நெடுஞ்சாலையாக வரலாற்றில் இடம்பிடிக்கும் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம மற்றும் குருநாகல் பகுதிக்கு இடையிலான அதுகல்புர நுழைவாயில் பொது மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
40 கிலோ மீட்டர் 910 மீட்டர் நீளத்தையுடைய 4 வழிப்பாதைகளை கொண்ட இந்த நெடுஞ்சாலையானது 137 பில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.