அரச ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவோருக்கு ரூபா 5,000 மாதாந்த கொடுப்பனவு வழங்குவது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பொதுச் சேவைகள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், ஜே.ஜே. ரத்னசிறியினால் குறித்த சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜனவரி 03ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.