Home LOCAL பசில் மீதான வழக்கு பெப்ரவரி மாதத்தில்

பசில் மீதான வழக்கு பெப்ரவரி மாதத்தில்

0
பசில் மீதான வழக்கு பெப்ரவரி மாதத்தில்

பசில் ராஜபக்ஷவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் நிதியமைச்சர் பதவிகளை வகிக்க சட்டரீதியாக தகுதி இல்லை என தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 7 ஆம் திகதி மேலதிக விசாரணைக்கு அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான சோபித ராஜகருனா மற்றும் தம்மிக கனேபொல ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போது பசில் ராஜபக்ஷ சார்பில் சட்டத்தரணி ஒருவரும் முன்நிற்கவில்லை.

இதற்கமைய பசில் ராஜபக்ஷவிற்கு துண்டுபிரதி அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு மனுதாரரின் சட்டதரணிகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதன் பின்னர் மனு மீதான அடுத்தக்கட்ட விசாரணை எதிர்வரும் 7 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here