Home LOCAL தனியார் பேருந்தும் டிப்பரும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து மூதூர் பகுதியில்

தனியார் பேருந்தும் டிப்பரும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து மூதூர் பகுதியில்

0
தனியார் பேருந்தும் டிப்பரும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து மூதூர் பகுதியில்

அம்பாறையிலிருந்து திருகோணமலையை நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் டிப்பரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 26 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இதில் இரண்டு வாகனங்களின் சாரதிகளும் அடங்குகின்றனர்.

இவ் விபத்து மூதூர் பட்டித்திடல் பகுதியில் இன்று (10) காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் இப் பேருந்தில் அதிகளவில் அரச உத்தியோகத்தர்கள் பயணித்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை அப் பகுதி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Sharfan Ahamed jmmc10
Addalaichenai

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here