நாளை முதல் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேர மின்வெட்டுக்கு மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக கடந்த சில நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இருப்பினும் இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்தினால் எரிபொருள் விநியோகிக்கப்பட்டமை மற்றும் வார இறுதியில் மின்சாரத்திற்கான கேள்வி குறைவாக காணப்பட்டமையால் நேற்றும் இன்றும் மின்வெட்டு இடம்பெறவில்லை.