மூன்று ஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சௌதி அரேபிய இளவரசி பாஸ்மாவும் அவரது மகளும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2019-ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்துக்கு சிகிச்சைக்கு செல்வதற்காகத் திட்டமிட்டிருந்தபோது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருப்பினும் அவர்களை கைது செய்தமைக்கான காரணம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.
அரசியல் சட்ட சீர்திருத்தம் மற்றும் மனிதநேய விவகாரங்கள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டதால் அவர் கைது செய்யப்பட்டிருக்கலாம் என பலரும் கருத்து தெரிவித்தனர்.
1953 ஆண்டு முதல் 1964 ஆம் ஆண்டு வரை சவுதி அரேபியாவை ஆட்சி செய்த முன்னாள் அரசர் சௌவுத்தின் மகள் பாஸ்மா பின் சௌத் மற்றும் அவரது மகள் ஆகிய இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீது எவ்வித குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படாமல் சுமார் மூன்று வருட காலம் சிறை தண்டனையை அனுபவித்துள்ளனர்.