அரசியலுக்காக தேசப்பற்றையும் எங்கள் சுதேச தனத்தையும் பௌத்தத்தையும் பிளவுபடுத்திய அரசாங்கமே இன்று நாட்டில் காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நேற்று (7)ஆம் திகதி வெலிஓயாவில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தி கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் பின்வருமாறு கருத்து தெரிவித்துள்ளார்.
‘போட்டிக்காக பணம் அச்சடிக்கப்படுகிறது. பணவீக்கம் உயர்வதற்கு விலைவாசி உயர்வுக்கும் பணம் அச்சடிப்பதும் ஒரு காரணமாகும். ஒரு சிறிய பொருளை வாங்க சிம்பாபேயிற்கு பணத்தை பில்பெரவில் எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். அந்த அளவுக்கு பணம் வீழ்ச்சி கண்டுள்ளது. அதுதான் உயர் பணவீக்கமாகும். சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் நம் நாடு ஆபத்தில் வீழ்ந்து விடும்.
நாட்டை கொண்டு நடத்த முடியவில்லை என்றால் இராஜினாமா செய்து நாட்டை கட்டியெழுப்புவதற்கு பொருத்தமான அணிக்கு பொறுப்பை வழங்க வேண்டியதையே மேற்கொள்ள வேண்டியுள்ள விடயமாகும்.
மக்களுக்கு பல பிரச்சினைகள் இருந்தாலும் அரசாங்கத்திற்குள் பல புதிய பிரச்சினைகள் அதிகம் உருவெடுத்துள்ளன. மலக் கப்பலுக்கு 6.7 மில்லியன் டொலர் செலுத்த அரசாங்கத்திடம் பணம் உள்ளது. ஆனால் கொஞ்சம் பால் மா இறக்குமதி செய்ய பணம் இல்லை.
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் கோடீஸ்வரர்களுக்கு வரிச்சலுகை வழங்கப்பட்டது.அரசாங்க வருமானம் குறைந்தது. இலங்கையின் பொருளாதாரம் பலவீனமாக உள்ளதாக தர மதிப்பீட்டு நிறுவனங்கள் கண்டறிந்து கொண்டன. இதனால் நமது நாடு வெளிநாட்டுக் கடன் சந்தையில் குறைந்த வட்டியில் கடன் வாங்க முடியாது போய்யுள்ளது. இல்லாத டொலரைக் கொண்டு வரவென இப்போது நம் நாட்டில் சொத்து ஏலத்தில் அரசாங்கம் வெள்ளையடிக்கிறது.’
மேலும் இந்த பொருளாதார நெருக்கடியை சமாளிக்க தெளிவான பொருளாதார கொள்கைகளுடன் சர்வதேச சமூகத்துடன் கலந்துரையாட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.