தோட்டப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு பயிர்செய்வதற்காக ஒரு ஏக்கர் காணியை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தாநந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
மக்கள் தோட்ட அபிவிருத்திக்கு சொந்தமான நாவலப்பிட்டி பொஹில் தோட்டத்தின் 100 ஏக்கரை தோட்டத்திலுள்ள 100 இளைஞர்களுக்கு விவசாய அமைச்சர் மஹிந்தாநந்த அளுத்கமகே நேற்று வழங்கியுள்ளார்.
100 ஏக்கர் நிலப்பரப்பில் அரசாங்க உரங்களை பயன்படுத்தி மரக்கறிகள் மற்றும் பழங்கள் உள்ளிட்ட இயற்கை பயிர்களை பயிரிட முடியும் என விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பயிர்செய்கையில் ஈடுப்படும் இளைஞர்களுக்கு 300,000 ரூபா பணத்தொகையும் வழங்கப்படவுள்ளது.