இலங்கையின் தங்கக் கையிருப்பு டிசம்பர் மாதம் 206.8 மில்லியன்; அமெரிக்க டொலர்களால் குறைவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையினூடாக குறிப்பிட்டுள்ளது.
மேலும் நவம்பர் மாத இறுதியில் 382.2 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த தங்கக் கையிருப்பு டிசம்பர் மாதத்தில் 175.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
இதேவேளை நவம்பர் மாத இறுதியில் இருந்த மொத்தக் கையிருப்பு 1.588 பில்லியன் அமெரிக்க டொலர்கள் 3.137 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.