அம்பாறை மாவட்டம், கல்முனை மாநகர மக்களால் நடாத்திவரும் கல்முனை கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹாவின் 200 வது கொடியேற்று விழா, கடந்த (04) செவ்வாய்க்கிழமை அன்று ஆரம்பமானது இதனை சிறப்பிக்குமுகமாக 25 ரூபாய் பெறுமதியான முத்திரை ஒன்று கல்முனை கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹா ஷரீப் முன்றலில் இன்று (06) மாலை வெளியிடப்பட்டது.
கல்முனை முஹயித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹா ஷரீபின் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ .அஸீஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் அழைப்பின் பேரில் வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும பிரதம அதிதியாகவும் மேலும் பல அரசியல் தலைவர்கள் மத பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.
Sharfan JMMC 10
Addalaichenai