பிலியந்தலை மஹரகம வீதியில் தொலேகனந்த சந்தியில் உள்ள இரண்டு மாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் இரண்டு மில்லியன் ரூபா பெறுமதியான வாகன உதிரிபாகங்கள் முற்றாக சேதமடைந்துள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாடி வீட்டின் கீழ் வீட்டில் தீ பற்ற ஆரம்பித்து மேல் வீட்டிற்கும் பரவலடைந்துள்ள நிலையில் அங்கு காணப்பட்ட வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வாகன உதிரிபாகங்கள் அனைத்தும் தீயினால் எரிந்து சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.