எரிவாயுக்களின் தரத்தை பரிசோதிக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளரினால் இலங்கை தர நிர்ணய நிறுவனத்திற்கு எழுத்து மூலம் அனுமதி வழங்கியுள்ளதுடன் அது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட வேண்டும் எனவும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
எரிவாயுக்களின் தரத்தை பரிசோதிப்பதற்கு இலங்கை தர நிர்ணய நிறுவனத்திற்கு அனுமதி வழங்குமாறு ஏற்றுமதி இறக்குமதி அதிகாரிகளிடம் நுகர்வோர் விவகார அதிகாரசபை கோரிக்கை முன்வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதற்காமைய தர நிர்ணய நிறுவனத்திற்கு எரிவாயு தரத்தை பரிசோதிப்பதற்கு வர்த்தமானி அறிவிப்பின் மூலம் சட்டரீதியாக அதிகாரம் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
எரிவாயு தரம் தொடர்பிலான பிரச்சினையானது சுமார் 6 வருடங்களுக்கு பழைமையான பிரச்சினை எனவும் எரிவாயு எந்த நிறுவனத்திலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது? அவைகளின் தொழிற்சாலைகள் எவை? இறக்குமதிக்கு முன்னர் எவ்வாறு பரிசோதிப்பது? போன்ற எரிவாயுவின் தரத்தை பரிசோதிக்கும் நடைமுறைகள் பல இருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிகாட்டியுள்ளார்.