மொரிசியஸ் எண்ணெய் கசிவு: கப்பல் கேப்டனுக்கு 20 மாத சிறைத்தண்டனை

மொரிசியஸ் கடலில் கடந்த 2020ம் ஆணடு ஜூலை மாதம் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த எம்.வி.வாகாஷியோ என்ற எண்ணெய்க் கப்பல் விபத்துக்குள்ளானது.

குறித்த கப்பலானது சிங்கப்பூரிலிருந்து பிரேசில் நோக்கி பயணித்திருந்தது.சுமார் 3800 டன் எரிபொருளும் , 200 டன் டீசலும் இந்த கப்பலில் எடுத்துச்செல்லப்பட்டது. இந்த விபத்தில் சுமார் 1000 தொன் எண்ணெய் கடலில் கசிந்தது. இதனால்  ஏராளமான கடல்வாழ் உயிரினங்கள் வாழும் கடலில் ஆயிரம் டன் எண்ணெய் கலந்ததால் கடலின் சுற்றுச்சூழல் கடுமையாக மாசடைந்தது.

இது தொடர்பாக கப்பல் கேப்டன் சுனில் குமார் நந்தேஸ்வர்,இரண்டாம் நிலை அதிகாரி (துணை கேப்டன்) ஜனேந்திர திலகரத்ன ஆகியோர் மீது மொரிசியஸ் தீவின் போர்ட் லூயிஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விசாணையின்போது, கப்பலில் நடந்த விருந்து நிகழ்ச்சியின்போது மது அருந்தியதை கேப்டன் சுனில் குமார் ஒப்புக்கொண்டதுடன், மன்னிப்பும் கேட்டார். துணை கேப்டனும் தவறை ஒப்புக்கொண்டார். வாதப் பிரதிவாதங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், கேப்டன் மற்றும் துணை கேப்டன் இருவரும் குற்றவாளிகள் என கடந்த வாரம் நீதிமன்றம் அறிவித்தது.

அவர்களுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது. குற்றவாளிகளான கேப்டன் சுனில் குமார் நந்தேஸ்வர், துணை கேப்டன் ஜனேந்திர திலகரத்ன ஆகியோருக்கு தலா 20 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். கேப்டனும், துணை கேப்டனும் பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டதாகவும், கப்பலை முறையாக செலுத்த தவறியதாகவும் நீதிபதி குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here