இலங்கையில் வெளிநாட்டு பிரஜைகளுடன் தொடர்புடைய திருமணங்களுக்கு அரசாங்கம் விதித்துள்ள புதிய விதிமுறையான பாதுகாப்பு அமைச்சின் அனுமதிக்கு எதிராக சட்டத்தரணி திஷ்யா வெரகொட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இலங்கையில் வெளிநாட்டவர் ஒருவரின் திருமணத்தை பதிவு செய்வதற்கு சில நிபந்தனைகளை விதிக்க பதிவாளர் நாயகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக செய்தி வெளியானதையடுத்து இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ள இந்த நிபந்தனைகளை அமுல்படுத்த வேண்டாம் என பதிவாளர் நாயகத்திற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு கட்டளை பிறக்குமாறு திஷ்ய வெரகொட தெரிவித்துள்ளார்