நாட்டில் பதிவாகும் சமையல் எரிவாயு வெடிப்புகள் மற்றும் சந்தைக்கு வெளியிடப்பட்டதாக கூறப்படும் தரமற்ற சமையல் எரிவாயு தொடர்பில் கலந்துரையாடுவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாளைய தினம் விசேட கூட்டமொன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
லிட்ரோ மற்றும் லாப் எரிவாயு நிறுவனங்களின் தலைவர்கள், எரிவாயு தொடர்பிலான விபத்துக்களை விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ள விசேட குழுவின் உறுப்பினர்கள் மற்றும் நுகர்வோர் விவகார அதிகார சபை , இலங்கை தர நிர்ணய நிறுவனம் இலங்கை பெற்றொலிய ஒத்துமைப்பு ஆகியவற்றின் அதிகாரிகள் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து பங்குதாரர்களுக்கும் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.