ஓமிக்ரோன் வைரஸானது மிக வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
தற்போது 89 நாடுகளில் ஒமிக்ரோன் வைரஸ் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் சமீபத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள நாடுகளில் ஒமிக்ரோன் வைரஸானது அதிகளவில் வீரியம் அடைந்து காணப்படுவதாக குறித்த அறிக்கையில் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.
தற்போதுவரையில் மூன்று நாட்களுக்கு ஒருமுறை ஒமிக்ரோன் தொற்றாளர்கள் இரட்டிப்பாவதை அநேக நாடுகளில் காணக்கூடியதாக இருக்கின்றது என உலக சுகாதார அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.