புதிய கொவிட் வைரஸான ஒமிக்ரோனின் பாதிப்புகள் பெரிதளவில் ஏற்படாவிட்டால், ஜனவரி மாதம் முதல் அனைத்து பழ்கலைகழக மாணவர்களும் பழ்கலைகழகங்களுக்கு அழைக்கப்படுவார்கள் என பழ்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தற்போதும் 25 வீதமான மாணவர்கள் பழ்கலைகழகங்களுக்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக பழ்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.
சில பழ்கலைகழகங்களின் விடுதிகளில் 3000 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் இருப்பதால் அவர்கள் பழ்கலைகழகங்களுக்கு அழைக்கப்பட்டால் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு கொவிட் தொற்று ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.