இந்திய பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கு சிறிது நேரம் ஹேக் செய்யப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் பதிவிட்டிருந்த பதிவை ஹேக்கர்கள் மாற்றியதாகவும் பின்னர் சிறிது நேரத்தில் அந்த கணக்கை பிரதமர் அலுவலகம் மீட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.