ஒமிக்ரோன் தொற்றினால் முதல் மரணம் இங்கிலாந்தில் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் இங்கிலாந்தில் நவம்பர் 27 ஆம் திகதி முதல் ஒமிக்ரோன் தொற்று இனங்காணப்பட்டது தொடக்கம் இங்கிலாந்து பிரதமர் கடுமையான கட்டுப்பாட்டு சட்டங்களை விதித்திருந்ததுடன்அனைவரையும் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக்கொள்ள வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் இந்நாட்டில் முதல் ஒமிக்ரோன் தொற்று மரணம் ஏற்பட்டுள்ளதுடன் 40 சதவீத வேகத்தில் குறித்த நாட்டில் தொற்றுப் பரவலடைகின்றமைக் குறிப்பிடத்தக்கது.