பாகிஸ்தானில் இடம்பெற்ற பிரியந்த குமாரவின் கொலை சம்பவம் தொடர்பிலான வழக்கை தினமும் விசாரணைக்கு எடுப்பதற்கு பஞ்சாப் அரசு தீர்மானித்துள்ளது.
குறித்த வழக்கை விசாரணை செய்வதற்கு விசேட இடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது எனவும் தலைமறைவாகியுள்ள குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.
பிரியந்த குமாரவின் மரணத்திற்கு காரணமான பிரதான 2 சந்தேக நபர்கள் மற்றும் துணையாக இருந்த 900 பேருக்கு பயங்கரவாத சட்டத்தின் கீழ் டிசம்பர் 7 ஆம் திகதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இவர்கள் மீது 11 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.