கொவிட் 19 தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாத ஒவ்வொரு ஆஸ்திரியருக்கும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை 3600 யூரோக்கள் அபராதம் விதிக்க ஆஸ்திரிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தற்போது வரையில் ஆஸ்திரியா சனத்தொகையில் 68 முழுமையாக தடுப்பூசி பெற்றுக் கொண்டுள்ளதுடன் ஆனால் இது மேற்கு ஐரோப்பாவின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும் போது மிகசிறிய சதவீதமாகும் என ஆஸ்திரிய சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும் இத்தகைய சட்டத்தின் மூலம் தடுப்பூசிகளை பெறுவதற்கு ஆஸ்திரிய மக்கள் வழிநடத்தப்படுவார்கள் என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.