சஹீரா சமீரினால் எழுதப்பட்ட “ஓயாத ஓலங்கள்” கவிதை தொகுப்பு வெளியீட்டு நிகழ்வு (PHOTOS)

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருட மாணவி சஹீரா சமீரினால் எழுதப்பட்ட “ஓயாத ஓலங்கள்” கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா கடந்த 2021 டிசம்பர் மாதம் 08ஆம் திகதி புதன்கிழமை மடுள்போவ முஸ்லிம் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
கல்லூரி அதிபர் ஸைனுல் ஹுசைன் வரவேட்புரையுடன் நிகழ்வை துவக்கி வைத்தார்.
நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த ஊடகவியலாளரும், மாவனல்லை ஜே.எம் மீடியா நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரும், தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளருமான ராஷித் மல்ஹார்டீன் புத்தகத்தை வெளியிட்டு வைத்ததுடன் முதற் பிரதியையும் பெற்றுக்கொண்டார்.
 
நிகழ்வின் நூல் அறிமுக விழாவை சிரேஷ்ட  ஊடகவியலாளர் அமீர் ஹுசைன் நடத்தினார். நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், ஊர்மக்கள், தனவந்தர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
சஹீரா சமீர் ஆரம்பக் கல்வியை தல்கஸ்பிடிய முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும் உயர்கல்வியை ஹெம்மாதகமை மடுள்போவ முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும் கற்றதோடு மாவனல்லை ஜே.எம் மீடியா ஊடகக் கல்லூரியில் ஊடகக் கற்கை நெறியையும் பூர்த்தி செய்துள்ளார்.
பவள விழா காண இருக்கும் மடுல்போவை மு.ம.வி இன் பவள விழாவை நோக்கிய செயற்திட்டங்களில் ஒன்றாக இப் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
Book launch of Shaheera Sameer held in Hemmathagama Madulbowa Muslim Maha Vidyalaya on 08th December 2021 which was organized by the Instruction of the Principal Zainul Hussain.
Shaheera Shameer is a first-year student of the South Eastern University and the Old girl of Thalgaspitiya Muslim Maha Vidyalaya and Madulbowa M.M.V. She has also completed an Advanced Certificate in Mass Media course at JM Media College, Mawanella.
The name of the poetry collection is “Oyatha Olankal”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here