நியுஸிலாந்தின் இளைய தலைமுறையினர் அவர்களுடைய வாழ்நாளில் சிகரட் புகைப்பிடிக்கும் சந்தர்ப்பத்தை இல்லாமற் செய்ய எதிர்பார்ப்பதாக நியுஸிலாந்தின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய 14 வயதிற்கு மேற்பட்ட சிறார்களுக்கு சிகரட் விற்பனை செய்வதை தடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு சிகரட்டற்ற ஒரு தலைமுறையினரை உருவாக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் 2027 ஆம் ஆண்டாகும் போது 14 வயதாகும் சிறார்களுக்காக இந்த சட்டம் நியுஸிலாந்தில் அமுலாகவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய பசுபிக்க வலய நாடுகளில் உள்ள சுமார் 05 மில்லியன் இளைஞர் சமுதாயத்திற்கு சிகரட் கொள்வனவு செய்வது சட்டபூர்வமாக தடைசெய்யப்படவுள்ளது.