இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனிற்கும் இடையிலான காஸா பகுதியில் இருந்து இஸ்ரேலை பிரிக்கும் பாதுகாப்பு வேலி அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் குறித்த இரும்பு வேலியானது இஸ்ரேலின் பாதுகாப்பு கருதி அமைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த வேலியின் நிர்மாணத்திற்கு 220,000 ட்ரெக் கொங்கிரீட் மற்றும் 140,000 டொன் இரும்பு பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.