2018 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் ஜாமல் கஷோகி கொலை செய்யப்பட்ட வழக்கில் சவூதியின் குடியுரிமையாளர் ஒருவர் பிரான்ஸ் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதனைத் தொடர்ந்து அவர் தவறான புரிந்துணர்வோடு கைது செய்யப்பட்டுள்ளதாக சவூதி அரேபியா தெரிவித்துள்ளது.
மேலும் துருக்கியால் வழங்கப்பட்ட கைது செய்வதற்கான உத்தரவின் அடிப்படையில் பிரான்ஸிலிருந்து ரியாத்திற்கு பயணிக்கவிருந்த நிலையிலேயே எல்லையிலிருந்து பொலிஸாரால் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கைது செய்யப்பட்ட காலித் அலோதைபி என்பவர் கஷோகியின் கொலையில் தொடர்புபட்டவருடைய பெயரைக் கொண்டிருக்கலாம் எனவும் குறித்த ஒரே பெயரில்; அநேகர் இருக்ககூடும் எனவும் சவூதி அரேபியா தெரிவித்துள்ளதாகவும் அவ்வூடகங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பிரான்ஸின் புலனாய்வாளர்கள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.