வாராந்த வேலை நாட்களை நான்கரை நாட்களாக குறைத்துள்ளது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்.
வெள்ளிக்கிழமை பிற்பகல், சனி மற்றும் ஞாயிறு புதிய வார இறுதி நாட்களாக அரசு அறிவித்துள்ளது.
ஜனவரி 1, 2022 முதல் அனைத்து மத்திய துறைகளிலும் இது நடைமுறைக்கு வரும் என அரசு செய்தி நிறுவனமான WAM தெரிவித்துள்ளது.
இந்த புதிய முறை அனைத்து மத்திய அரசு நிறுவனங்களிலும் காலை 7:30 மணி முதல் மாலை 3:30 மணி வரை வேலை நேரத்துடன் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை வேலை நேரம் காலை 7.30 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணிக்கு முடிவடையும். வெள்ளிக்கிழமை தொழுகை மதியம் 1:15 மணிக்குப் பிறகு இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த முடிவு உற்பத்தித்திறனை அதிகரிப்பது மற்றும் வேலை-வாழ்க்கை சமநிலையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று WAM தெரிவித்துள்ளது.