இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா தீவில் உள்ள மிக உயரமான எரிமலையான செமேரு எரிமலை வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 41 பேர் காயமடைந்துள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுற்றுவட்டார பகுதிகளை முற்றாக மறைத்துள்ள அடர்ந்த புகை காரணமாக பெருமளவிலான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.