எராஜ் சமிந்த பத்திராஜாவை தொழில்பதிவாளராக நியமித்து சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
குறித்த வர்த்தமானி அறிவிப்பானது கைத்தொழில் அமைச்சின் செயலாளர் தயா ரத்னாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் எராஜ் சமிந்த பத்திராஜா கைத்தொழில் அமைச்சின் தொழில்துறை மேம்பாடு மற்றும் தொழில் தோட்டத்துறை மேம்பாட்டு கூடுதல் செயலாளராகவும் பணியாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.