நாளை மூடப்படும் பாடசாலைகள் குறித்த அறிவிப்பு!

இரத்தினபுரி கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (05) மூடப்படும் என சப்ரகமுவ மாகாண கல்வி செயலாளர் தெரிவித்துள்ளார்.

சப்ரகமுவ மாகாண கல்விச் செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளார்.

அத்துடன் நிவித்திகல கல்வி வலயத்தின் எலபாத்த , அயகம, கலவான ஆகிய கல்விப் பிரிவுகளுக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளையும் நாளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்த பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாளைய தினம் நிலவும் சீரற்ற வானிலையின் அடிப்படையில் பாடசாலைகளை நடத்துவது குறித்து பிராந்திய பணிப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டு தீர்மானிக்கப்படும் என சப்ரகமுவ மாகாண கல்விச் செயலாளர் அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here