சர்வதேச நாணய நிதியத்தின் 2 ஆவது மீளாய்வுக் கூட்டத்தை நிறைவு செய்யும் வகையில், இலங்கை அரசாங்கம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்திற்கு இடையில் பொருளாதார கொள்கைகள் தொடர்பிலான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
சற்று முன்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் பிரதானி பீட்டர் ப்ரூயர் (Peter Breuer) இதனை தெரிவித்துள்ளார்.ை
அதன்படி சர்வதேச நாணய நிதியத்தின் அங்கீகாரம் கிடைத்தவுடன் இலங்கைக்கு 337 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி விடுவிக்கப்படும் என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் பிரதானி தெரிவித்தார்.
இலங்கை அமுல்படுத்தியிருக்கும் பொருளாதார மறுசீரமைப்புக்கான வேலைத் திட்டத்தின் பிரதிபலன்கள் பாராட்டத்தக்க வகையில் அமைந்துள்ளதாகவும், அதனூடாக சாதகமான முன்னேற்றத்தை அடைந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இலங்கையின் பணவீக்கம் எதிர்பார்த்ததை விடவும் வேகமாக குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டிய சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், அதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கும் பாராட்டு தெரிவித்தனர்.