உலக சாதனை படைத்த ரோகித் சர்மா

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

நேற்று (14) நடைபெற்ற போட்டியில் விளையாடுவதன் மூலம் இந்திய  கேப்டன் ரோகித் சர்மா புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.

சர்வதேச டி20 போட்டிகளில் 150 ஆட்டங்களில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்று உள்ளார்.

இதுவரை எந்த வீரரும் ரோகித் சர்மா அளவுக்கு அதிகமான போட்டிகளில் விளையாடியது கிடையாது. அவருக்கு அடுத்தபடியாக அயர்லாந்து அணியின் கேப்டன் பால் ஸ்டிர்லிங் 134 போட்டிகளில் பங்கேற்று 2 ஆவது இடத்தில் உள்ளார்.

இந்திய அணியை பொருத்தளவில் ரோகித்திற்கு அடுத்த இடத்தில் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி உள்ளார். அவர் 115 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 2ஆவது இடத்தில் உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here