Home LOCAL மின் கட்டண திருத்தம் தொடர்பில் PUCSL விசேட அறிக்கை!

மின் கட்டண திருத்தம் தொடர்பில் PUCSL விசேட அறிக்கை!

0
மின் கட்டண திருத்தம் தொடர்பில் PUCSL விசேட அறிக்கை!

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவொன்று தனது ஆணைக்குழுவின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பொய்யானது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபை இவ்வாறான முன்மொழிவொன்றை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாகவும், ஆனால் இன்று (08) வரை அவ்வாறான முன்மொழிவு ஆணைக்குழுவிற்கு கிடைக்கவில்லை எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here