Home LOCAL மத போதனைகளை திரிபு படுத்துவர்கள் தொடர்பில் கடுமையான தீர்மானம்!

மத போதனைகளை திரிபு படுத்துவர்கள் தொடர்பில் கடுமையான தீர்மானம்!

0
மத போதனைகளை திரிபு படுத்துவர்கள் தொடர்பில் கடுமையான தீர்மானம்!

மத போதனைகளை திரிபுபடுத்து மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளுக்கு எதிராக புதிய சட்டங்களை உருவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன, மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

மத போதனைகளை திரித்து சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் சிலரின் செயற்பாடுகளை தடுக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மத போதனைகளை திரித்து நபர் ஒருவர் ஆற்றிய பிரசங்கங்களை தொடர்ந்து குறித்த நபர் மற்றும் அவரைப் பின்பற்றுபவர்கள் என சிலர் தற்கொலை செய்து கொண்டமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் சட்ட கட்டமைப்பிற்குள் அனைவரும் அவரவர் மதத்தை கடைப்பிடிக்கக்கூடிய சூழலை உருவாக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, சமூகத்தை சிதைக்க முயற்சிக்கும் நபர்களின் மத நம்பிக்கைகள் தொடர்பில் ஆராய அமைச்சரவை குழுவொன்றையும் நியமித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here