Home LOCAL பாரியளவான போதைப்பொருள் தொகை சிக்கியது

பாரியளவான போதைப்பொருள் தொகை சிக்கியது

0
பாரியளவான போதைப்பொருள் தொகை சிக்கியது

நாட்டுக்குள் கொண்டு வருவதற்காக ஆயத்தமாக்கப்பட்டிருந்த பல பொதிகளில் இருந்து பாரியளவிலான போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளினால் இன்று (07) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது குஷ் போதைப்பொருள், ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகள் பதுக்கி வைத்திருந்ததை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்கா, கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இருந்து போதைப்பொருள் வந்திருக்கலாம் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீதுவ பிரதேசத்தில் உள்ள விநியோக நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டிருந்த பொதிகளில் 8 கிலோ கிராம் குஷ் போதைப்பொருளும், மெண்டி என்ற போதைப்பொருள் 160 கிராமும்,  350 எக்ஸ்டஸி போதை மாத்திரைகளும் 08 கிராம் ஐஸ் போதைப்பொருளும் இருந்துள்ளன.

இந்த பொதிகள் கொழும்பு பகுதியில் உள்ள பல போலி முகவரிகளுக்கு கூரியர் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

தற்போது இதன் பெறுமதி சுமார் 06 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பொதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிகளை ஆய்வு செய்த சுங்கத்துறை அதிகாரிகள், அவை போலியான முகவரிகள் என தெரியவந்ததையடுத்து அவற்றை திறந்து ஆய்வு செய்ய முடிவு செய்தனர்.

இதன்படி, மேலதிக விசாரணைகளுக்காக இந்த போதைப்பொருள் தொகை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here