பாகிஸ்தான் அணியின் பிரபல வீரர் இமாட் வசிம், அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வூ பெறுவதாக அறிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வூ பெறும் காலம் வந்துள்ளதாக இமாட் வசிம், தனது சமூக வலைத்தளங்களில் பதிவொன்றை பதிவேற்றியுள்ளார்.
55 ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும், 66 இருபதுக்கு இருபது போட்டிகளிலும் இமாட் வசிம் விளையாடியுள்ளார்.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நியூஸிலாந்து அணியுடனான போட்டியில் இமாட் வசிம் பாகிஸ்தானை பிரதிநிதித்துவப்படுத்தி இறுதியாக விளையாடியிருந்தார்.
34 வயதான இமாட் வசிம், ஒரு நாள் போட்டிகளில் 44 விக்கெட்களை கைப்பற்றியுள்ளதுடன், 986 ஓட்டங்களை பெற்றுள்ளார்.
அத்துடன், இருபதுக்கு இருபது போட்டிகளில் 65 விக்கெட்களை கைப்பற்றியுள்ளதுடன், 486 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளார்.