நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், 2024ம் ஆண்டு ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்ளை நிச்சயம் நடாத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே இதனைக் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களை நடாத்தியதன் பின்னர், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் அடுத்தடுத்து நடாத்தப்படும் எனவும் அவர் கூறினார்.
நாட்டில் ஆட்சியாளர்களுக்கு எதிராக நீதிமன்றங்கள் தீர்ப்புக்களை வழங்க ஆரம்பித்துள்ளதாக எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கூறியதை நினைவூட்டிய ஜனாதிபதி, அதற்கான சூழலை தானே நாட்டில் ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
நாட்டில் தற்போது ஜனநாயகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளமையினால், தேர்தல்களை நடாத்த அஞ்சப்போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சபையில் தெரிவித்தார்.