அனைத்து தபால் ஊழியர்களும் நேற்று நள்ளிரவு முதல் பணிப் பகிஷ்கரிப்பொன்றை ஆரம்பித்துள்ளனர்.
கண்டி மற்றும் நுவரெலிய தபால் அலுவலக கட்டிடங்கள் விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன்படி, நேற்று நள்ளிரவு முதல் 48 மணிநேர பணிப் பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.
தபால் ஊழியர்களின் விடுமுறை ரத்து
அனைத்து தபால் ஊழியர்களுக்குமான விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக பால் மாஅதிபர் ருவன் சத்குமார தெரிவித்துள்ளார்.
இன்று (08), நாளை (09) மற்றும் நாளை மறுதினம் (10) ஆகிய மூன்று தினங்களுக்கும் தபால் ஊழியர்களுக்கான விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.