சந்தையில் தரமற்ற டீசல் விநியோகமா? – அமைச்சர் வெளியிட்ட பதில்

0
1

சந்தைக்கு தரமற்ற டீசல் விநியோகிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என மின்சக்தி, வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கையிருப்பில் தற்போது காணப்படும் டீசல் மாதிரிகள், பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படும் டீசல் தரமற்றது என உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில், அந்த டீசல் தொகை நிராகரிக்கப்பட்டு, திருப்பி அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் மற்றும் சுயாதீன விசாரணை குழு துறைமுகத்தை சென்றடைந்துள்ளதாகவும், டீசல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மின்சக்தி, வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here