காஸாவிலிருந்த இலங்கையர்கள் எகிப்து வழியாக இலங்கைக்கு

0
3

காஸா எல்லையிலிருந்து எகிப்து நோக்கி பாதுகாப்பாக சென்ற 11 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

கட்டாரிலிருந்து கட்டுநாயக்க பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று அதிகாலை இவர்கள் வருகை தந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

காஸா எல்லையிலிருந்து 11 இலங்கையர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் எகிப்தை சென்றடைந்தனர்.

காஸா எல்லை பகுதியில் 17 இலங்கையர்கள் தங்கியிருந்த நிலையில், அவர்களில் 11 பேரே எகிப்து நோக்கி சென்றிருந்தனர்.

எஞ்சிய இலங்கையர்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலை காரணமாக அங்கிருந்து வெளியேற முடியாதுள்ளதாக தெரிய வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here