மட்டக்களப்பு கேம்பஸ் மீண்டும் கையளிப்பு

0
1

முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாவினால் நிர்மாணிக்கப்பட்ட தனியார் மட்டக்களப்பு கேம்பஸ் அரசாங்கத்தினால் கைப்பற்றப்பட்டு 4 வருடங்களின் பின்னர் மீண்டும் அதனை ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமாண் சம்பிராய பூர்வமாக நேற்று (04) புனானையில் அமைந்துள்ள கம்பேஸில் வைத்து ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாவிடம் கையளித்தார்.

மட்டக்களப்பு புனானையில் 400 ஏக்கர் நிலப்பரப்பில் தனியர் கம்பஸ்சினை முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஏ.எல்.எம். ஹிஸ்புல்லா நிர்மாணித்து வந்துள்ள நிலையில் ஈஸ்டர் குண்டு தாக்குதலின் பின்னர் அதனை அரசங்கம் கையகப்படுத்தி இராணுவ பாதுகாப்பில் இருந்து வந்ததுடன் இதனை இராணுவத்தினர் கொரோனா நோய்க்கான சிகிச்சை முகமாக பயன்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் ஏற்பட்ட கல்வியினை மேம்படுத்துவதற்காக இதனை வழங்குமாறு ஜனாதிபதியிடம் விடுத்த வேண்டு கோளுக்கு இணங்க இதனை மீண்டும் அவரிடம் வழங்குவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கிழக்கு மாகாண ஆளுநருக்கு ஆலோசனை மற்றும் பணிபுரை வழங்கப்பட்டது.

இதற்கமைய குறித்த கம்பஸினை சம்பிராயபூர்வமாக வழங்கும் நிகழ்வு நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் கலந்துகொண்டு பல்கலைக்கழக திட்டங்களை கேட்டறிந்து கற்றல் பகுதிகளை சென்று பார்வையிட்டு பின்னர் குறித்த பல்கலைக்கழக்தை சம்பிராய பூர்வமாக கிழக்கு ஆளுநரால் ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாவிடம் அதன் திறப்பை கையளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here