30 லட்சம் ரூபாய் பெறுமதியான ஐம்பொன் சிலை

0
1

வவுனியாவில் திருடப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு எடுத்துவரப்பட்ட 30 லட்சம் ரூபாய் பெறுமதியானது என மதிப்பிடப்பட்ட ஐம்பொன் சிலை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இன்று யாழ்ப்பாணம் ஐந்து சந்தி பகுதியில் வைத்து இந்த சிலை கைப்பற்றப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

சிலையை கடத்தி வந்தவர் தப்பி தலைமறைவாகிய நிலையில் தேடப்பட்டு வருவதாக பொலிஸார் கூறினார்.

யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் பரிசோதகர் ரி.மேனன் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

வவுனியாவில் திருடப்பட்ட 30 லட்சம் ரூபாய் பெறுமதியான ஐம்பொன் சிலை ஒன்று யாழ்ப்பாணம் ஐந்து சந்தியில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அந்தப் பகுதிக்கு பொலிஸார் சென்ற போது அதனை கடத்தி வந்தவர் தப்பித்தார். சிலை கைப்பற்றப்பட்டு யாழ்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here