கரந்தெனிய இராணுவ முகாமில் இருந்து காணாமல் போன T-56 ரக துப்பாக்கி, படபொல பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் கரந்தெனிய இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கரந்தெனிய இராணுவ முகாமில் இருந்து டி-56 துப்பாக்கி மற்றும் மகசீன்கள் பல காணாமல் போனமை தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேலும், ராணுவ பொலிஸாரும் விசாரணையை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரந்தெனிய இராணுவ முகாமின் ஆயுதக் களஞ்சியத்தில் இருந்து காணாமல் போன துப்பாக்கிகளைப் பயன்படுத்தி தென் மாகாணத்தில் சில கொலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.